திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

திண்டுக்கல்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் மவுனவழி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜோதிராமலிங்கம், அப்துல்ஜப்பார், முகமதுசித்திக், தெற்கு மண்டல தலைவர் கார்த்திக், ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது என வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com