குன்னூரில் நெரிசல்: இடம் மாறிய லாரிகள் நிறுத்தம்

வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலாததால் நடவடிக்கை ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.
குன்னூரில் நெரிசல்: இடம் மாறிய லாரிகள் நிறுத்தம்
Published on

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருவதால், மார்கெட் நுழைவு வாயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலவில்லை. மேலும் அந்த பகுதியில் சரக்குவாகன நிறுத்தம் செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வி.பி.தெரு பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே சரக்குவாகன நிறுத்தும் இடம் தற்போது குன்னூர் மெயின் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது இதனால் அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் சரக்குவாகன நிறுத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பிக்கப் டிரைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com