காரில் கடத்திய ரூ.1 லட்சம் குட்கா-புகையிலை பறிமுதல்- 2 பேர் கைது

விசாரணையில் ஆந்திராவில் இந்து குட்காவை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.குட்கா கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் கடத்திய ரூ.1 லட்சம் குட்கா-புகையிலை பறிமுதல்- 2 பேர் கைது
Published on

திருவள்ளூர்:

ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் திருவள்ளூர் வழியாக காரில் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவுப்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டரை பெரும்புதுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மொத்தம் 102 கிலோ இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக காரில் இருந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சட்டாராம், தயாராம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவில் இந்து குட்காவை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா, புகையிலை எங்கு கடத்தி செல்லப்பட்டது? அவர்களுடன் தொடர்பில் உள்ள குட்கா கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com