திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீதன பொருட்கள் வழங்கினார்

திருச்செந்தூர் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றதுஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் உள்பட பல்வேறு சீதன பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) ரூபி பெர்ணான்டோ வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் உள்பட பல்வேறு சீதன பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச் செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் ரேவதி கோமதிநாயகம், சுதாகர், அரசு வழக்கறிஞர் சாத்ராக், கேடிசி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com