வாசுதேவநல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.
வாசுதேவநல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா
Published on

சிவகிரி:

சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார். வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சுந்தர், உள்ளார் விக்கி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, மேற்பார்வையாளர்கள் அமுதா, சுகந்தி, பணியா ளர்கள் காளியம்மாள் (மகளிர் தொண்டர் அணி), இந்திரா, சீனியம்மாள், முத்துமாரி, துரைகண்மீரால், பரமேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com