திட்டக்குடியில் அவலம்: ஆபத்தை உணராமல் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள்

பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணிக்கின்றனர்.கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்க வேண்டும்.
ஆபத்தை உணராமல் பஸ்சில் பயணிக்கும் மாணவர்களை படத்தில் காணலாம். 
ஆபத்தை உணராமல் பஸ்சில் பயணிக்கும் மாணவர்களை படத்தில் காணலாம். 
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து ஆவட்டி, மங்களூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ் வழக்கம் போல் திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து சென்றது. பெருமுளை சாலையில் சென்ற போது பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்து உணராமல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

கல்லூரிக்காக ஏற்கனவே பஸ் ஒன்று இயக்குப்பட்டிருந்தது. தற்போது முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் இது போன்ற பின்பக்கம் படிக்கட்டில் ஆபத்து உணராமல் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்கனவே கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை  முறையாக இயக்கினால் இதுபோல மாணவர்கள் பயணம் செய்ய நேரிடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com