திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

வீட்டில் தனியாக இருந்த மாணவர் பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். மயங்கிய வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம்பட்டி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் சுதர்சன் சக்திவேல் (வயது18). தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுதர்சன், பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

அங்கு மயங்கி கிடந்த இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை அடுத்து பிரேத பரி சோதனை க்காக சுதர்சன் உடல் மருத்துவ மனையில் வைக்க ப்பட்டு ள்ளது. இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com