வால்பாறையில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

முருகேஷ் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது.
வால்பாறையில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிபாறையை சேர்ந்தவர் ஹென்டி. இவரது மகன் முருகேஷ் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 29-ந் தேதி முருகேஷ் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். 10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது. இதனை கூலிவேலை செய்து வரும் தனது தாய் , தந்தையிடம் எப்படி கேட்பது என நினைத்தார்.

இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தங்களது மகனை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முருகேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முருகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com