என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை
- 2 பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார்.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பாடத்தை மீண்டும் தேர்வு எழுதினார்.
கோவை,
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நர சிம்மநாயக்கன் பாளையம் ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 47). கட்டிட தொழிலாளி.
இவரது மகள் கிருத்திகா (18). இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்த நிலையில் அவர் 2 பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பாடத்தை மீண்டும் தேர்வு எழுதினார். ஆனால் மீண்டும் அதில் தோல்வி அடைந்தார். இதனை நினைத்து அவர் சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






