கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோவை:

கோவை செட்டிப்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 20). இவர் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பொற்றோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.

இதனால் விக்னேஷ்வரி மற்றும் அவரது சகோதரர் தனது மாமா வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ்வரி கடந்த சில நாட்களாக தனது சகோதரரின் எதிர்காலத்தை குறித்து மனவேதனை அடைந்து வந்தார்.

சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com