10-ம்வகுப்பு மாணவியை கற்பழித்த கல்லூரி மாணவர் கைது

குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.
10-ம்வகுப்பு மாணவியை கற்பழித்த கல்லூரி மாணவர் கைது
Published on

கோவை,

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10- ம்வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் குனியமுத்தூர் கல்லூரி மாணவர் குருபிரசாத் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மாணவி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சூலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com