கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆண்டிப்பட்டி கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் அருள் பாண்டி (20). இவர் தேனியில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

அங்குள்ள கடையில் ஐஸ்கிரீம் வாங்கும் போது திருச்செந்தூரைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து இருவரும் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10ந் தேதி முதல் மாணவி மாயமானார்.

இது குறித்து அவரது பெற்றோர் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி அருள்பாண்டியை காதலித்தது தெரிய வந்தது. ஆண்டிபட்டிக்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அருள்பாண்டி சிறுமியை பழனியில் வைத்து திருமணம் செய்து பாலக்காட்டில் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு அருள்பாண்டியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com