தஞ்சையில் ரத்ததானம் வழங்கிய கல்லூரி மாணவிகள்

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.
கல்லூரி மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.
கல்லூரி மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.
Published on

தஞ்சாவூர்:

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், பான் செக்கர்ஸ் கல்லூரியின் இயக்குனர் டெரன்சியா மேரி, கல்லூரி முதல்வர் காயத்ரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட சேர்மன் மருத்துவர் வரதராஜன், மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், தஞ்சை மிராசுதார் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் காயத்ரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வித்யா மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com