

உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழி அம்மன் கோயில்தெருவை சேர்ந்த வர் இந்திரா (வயது 54) இவரது மகள் மாலதி ( 17). இவர் காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி வேலைவாய்ப்பு சம்பந்தமாக பதிவு செய்ய செல்வதாக கூறி பள்ளி சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் இதுகுறித்து குலசேகரபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.