மாமல்லபுரம் அருகே மத்திய, மாநில அரசு திட்ட பணிகளை திடீர் ஆய்வு செய்தார் கலெக்டர் ராகுல்நாத்

பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆய்வின்போது ஊராட்சி தலைவர் செங்கேணி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மணமை பகுதியில் ஆய்வு செய்யும் கலெக்டர் ராகுல்நாத்.
மணமை பகுதியில் ஆய்வு செய்யும் கலெக்டர் ராகுல்நாத்.
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அங்குள்ள பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் இன்று அங்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். ஊராட்சி தலைவர் செங்கேணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குன்றத்தூர், வெங்கம்பாக்கம் பகுதிகளுக்கு சென்று மத்திய, மாநில அரசு நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com