மழையால் இடிந்து விழுந்த எடப்பாடி படகுத்துறை நடைமேடை சீரமைப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நடைமேடை பாதிப்பு.பூலாம்பட்டி படகுத் துறையில் கடந்த 3 நாட்களுக்கு முன் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மழையால் இடிந்து விழுந்த  எடப்பாடி படகுத்துறை நடைமேடை சீரமைப்பு
Published on

எடப்பாடி:

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி படகுத் துறையில் கடந்த 3 நாட்களுக்கு முன் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் விசைப்படகுத் துறையின் நடைமேடை திடீரென இடிந்து காவிரி ஆற்றுக்குள் விழுந்தது.

காவிரியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பூலாம்பட்டி பஞ்சாயத்து பணியாளர்கள் மணல் மூட்டைகளை தயார் செய்து, காவிரி கரையோரம் நடைமேடை இடிந்து விழுந்த பகுதிகளில் அடுக்கி தற்காலிகமாக சுவர் அமைத்து உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com