கோவையில் ஆன்லைன் விளையாட்டு: நகை, பணத்தை இழந்த கல்லூரி மாணவி காதலனுடன் மாயம்

கோவையில் ஆன்லைன் விளையாட்டில் நகை பணத்தை இழந்த கல்லூரி மாணவி காதலனுடன் மாயமானார்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கோவை ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீ நகரை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. 

இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், சோமயம் பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

நாளடைவில் இது காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடி வந்தனர். இதனால் அவர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து மாணவி தனது வீட்டிலிருந்து 3 பவுன் தங்க நகைகள் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து தனது காதலருடன் சேர்ந்து ஆன்லைன் மூலம் பணம் வைத்து விளையாடி உள்ளார். இதிலும் இழப்பு ஏற்பட்டது.

இதை தெரிந்து கொண்ட மாணவியின் பெற்றோர் நகை மற்றும் பணம் எங்கே என்று அந்த மாணவியிடம் கேட்டனர். 

மேலும் அந்த மாணவியுடன் சேர்ந்து விளையாடிய  வாலிபரை அழைத்து பணம் மற்றும் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டனர். அவர் அதற்கு திருப்பி தருவதாக உறுதியளித்தார். 

சம்பவத்தன்று மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. கல்லூரிக்கு சென்று பெற்றோர்கள் விசா ரித்தனர்.

 அப்போது அந்த மாணவி வாலிபருடன் சென்றதாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெற்றோர் அந்த மாணவியையும், அவரது காதலரையும் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

இதுகுறித்து மாணவியின் தந்தை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலருடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com