கோவை-நாகர்கோவில் ரெயில் 3 நாட்கள் முழுவதும் ரத்து

பகுதியளவு ரத்து மற்றும் வழித்தடம் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை-நாகர்கோவில் ரெயில் 3 நாட்கள் முழுவதும் ரத்து
Published on

திருப்பூர் :

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை - திருமங்கலம் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் ரத்து, பகுதியளவு ரத்து மற்றும் வழித்தடம் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வகையில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் தினசரி ரெயில் மார்ச் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பகல்நேரத்தில் இயக்கப்படும் ரெயில் மதுரையில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக தற்போது விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com