கோவை அவினாசி ரோடு மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் அகற்றம்

கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்படுகிறது. சுவர் விளம்பரங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
கோவை அவினாசி ரோடு மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் அகற்றம்
Published on

கோவை,

கோவை அவினாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

தற்போது பாலத்தி ற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி சுவர் விளம்பரங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக காந்திபுரத்தில் உயர்மட்ட மேம்பால சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

இதன் அடுத்தப்படியாக அவினாசி மேம்பால தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. மேலும் வருகிற 18-ந் தேதி ஜனாதிபதி கோவை வர உள்ளார். இதனால் தூண்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

சாலையின் நடுவே உள்ள தடுப்புகள், அவினாசி மேம்பாலம் ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ணம் பூசப்பட்டு கோவை புதுப்பொலிவு அடைந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com