காஞ்சிபுரத்தில் காலநிலை மாற்ற பயிலரங்கம்

மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் காலநிலை மாற்ற பயிலரங்கம்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்ற பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்றத்தை குறித்தும், இந்த ஆண்டிற்கான மழைப்பொழிவின் மாறுதலை பற்றியும், மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இதில் பல்வேறு துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டதால் காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இப்பயிலரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் துணை இயக்குநர் மணிஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் சங்கீதா கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com