காரைமேடு பகுதியில் தூய்மை பணி

பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை தவிர்க்க வேண்டும்.
தூய்மை பணி நடைபெற்றது.
தூய்மை பணி நடைபெற்றது.
Published on

சீர்காழி:

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 100,க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கடற்கரையில் தூய்மை பணியை தொடங்கினர்.

பூம்புகார் பீச் மணல் பரப்பில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், ஐஸ்கிரீம் கப், பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள், போன்றவற்றை ஒவ்வொ ன்றாக எடுத்து சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் கூறுகையில்:

நம் பாரத பிரதமரின் முக்கிய நோக்கம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 மையத்தில் சேர்மன் சாமி தலைமையில் அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

காரைமேடு ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திலும், அதனைத் தொடர்ந்து பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களிலும் அகில இந்திய அளவில் இப்பணி நடைபெற உள்ளது.

குறிப்பாக கடற்கரை பகுதியில் வீசப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி கடலில் கலந்து மீன்கள் உண்ணும் பொழுது அந்த மீன்களை சாப்பிடும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பீச் பகுதியில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com