முக்கூடல் பேரூராட்சியில் தூய்மை பணிகள்

முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள வெள்ள ளோடை கால்வாயும் சுத்தம் செய்யப்பட்டது.மங்கம்மாள் சாலை தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மரக்கன்று நட்ட போது எடுத்தபடம். 
மரக்கன்று நட்ட போது எடுத்தபடம். 
Published on

முக்கூடல்:

முக்கூடல் பேரூராட்சி யில் தூய்மை நகரங்க ளுக்கான மக்கள் இயக்கம் நடவடிக்கையாக நீர்நிலை கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் ராதா தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் லட்சுமணன், செயல் அலுவலர் மாலதி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் சொக்கலால் மேல்நிலை பள்ளி சார ணர் இயக்க மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நீர்நிலைகள், கோரங்குளத்தின் கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

அதேபோல் முக்கூடல் பேரூராட்சி அலுவ லகத்தின் பின்புறம் உள்ள வெள்ள ளோடை கால்வாயும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மங்கம்மாள் சாலை தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்தல் தொடர்பான சுவ ரொட்டிகள் வரையப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com