பல்லடம் அரசு பள்ளிக்கு ரூ.17 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம்

போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. பள்ளிகள் திறந்ததும் ஸ்மார்ட் வகுப்பறை கொண்டு வரவும் திட்டம் உள்ளது
பல்லடம் அரசு பள்ளிக்கு ரூ.17 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம்
Published on

பல்லடம் :

பல்லடம் பி.டி.ஓ., காலனி அரசு நடுநிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க தீர்மானித்தனர்.

இதன்படி அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தில்குமார், சங்கரி ஆகியோர் தாங்களே வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து 17 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தனியார் பள்ளிக்கு நிகராக கட்டப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் திறந்ததும் ஸ்மார்ட் வகுப்பறை கொண்டு வரவும் திட்டம் உள்ளது. திருப்பூர் பட்டாம்பூச்சி ஆசிரியர் குழுவினர் வகுப்பறை சுவர்களில் ஓவியங்கள் வரைந்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com