உடுமலை அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்

இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 
பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 
Published on

உடுமலை,

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். கடந்த சில நாட்களாக கோவில் விழா நடந்து வருகிறது. இந்நிலையில் தேரோட்டம் நடைபெற இருந்தது. இதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. தகவல் கிடைத்ததும் சுண்டக்காம்பாளையம் கிராத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல், வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் மோதல் போக்கு தொடர்ந்துள்ளது.இதையடுத்து போலீசார் நேற்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த கோவிலை பூட்டி வைத்துள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இன்று பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com