மாடியில் இருந்து கீழே விழுந்த அரசு ஊழியர் பலி

சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாடியில் இருந்து கீழே விழுந்த அரசு ஊழியர் பலி
Published on

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவருக்கு நித்தியா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுந்தர் ராஜன் கடந்த 7வருடங்களாக சின்னசேலம் வான கொட்டாய் பகுதியில் உள்ள அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் இளநிலை பயிற்சி அலுவலராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறையை கழிப்பதற்காக இவரது மனைவியும் குழந்கதைளும் சிதம்பரம் சென்றதாக கூறப்படுகிறது. சுந்தர்ராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே பார்த்தபோது வீட்டின் சந்தில் சுந்தர்ராஜன் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்த போது சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சுந்தர்ராஜனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com