நட்டாத்தியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

6 ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு குழுவின் தலைவரும், நட்டாத்தி ஊராட்சி தலைவருமான சுதாகலா தலைமை தாங்கினார்.
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். 
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். 
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தாய் தந்தையை இழந்த கொம்புக்காரன் பொட்டலைச் சேர்ந்த பிரகாஷ் என்ற குழந்தைக்கு அரசு நிதி உதவி வழங்க விண்ணப்பம் பெறப்பட்டது. குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வளர் இளம் பெண்கள் கூட்டம், மகளிர் சுய உதவி குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

கண்ணான்டி விளை வளர்இளம் பெண்கள் கூட்டம், பட்டான்டி விளை மகளிர் சுய உதவி குழு கூட்டம் மற்றும் நட்டாத்தியில் ஊராட்சியில் 6 ஆரம்ப பள்ளிகளில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு குழுவின் தலைவரும், நட்டாத்தி ஊராட்சி தலைவருமான சுதாகலா தலைமை தாங்கி னார். குழுவின் செயலர் கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ் பானுகோபன் மற்றும் உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர் ஜெமி ஜெயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் அனிதா, போலீசார் சண்முகம் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொம்புகாரன் பொட்டல் பண்டாரம், சுப்பிர மணியபுரம் ஜேஸ்மின் கோவில் பிள்ளை, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் எஸ்தர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கள் தேவி சகுந்தலா, ஜோதி கனி, உச்சிமாகாளி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நட்டாத்தி ஊராட்சி செய லர் முத்துராஜ் செய்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com