அரசு அலுவலகங்களில் திருக்குறள்- தலைமை செயலாளர் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
அரசு அலுவலகங்களில் திருக்குறள்- தலைமை செயலாளர் உத்தரவு
Published on

சென்னை:

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்.

திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com