போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிகாரி அறிவுரை

பழனியில் நடந்த பயிற்சி வகுப்பில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சென்னை அதிகாரி அறிவுரை வழங்கி பேசினார்
பயிற்சி வகுப்பில் சென்னை வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார் பேசினார்
பயிற்சி வகுப்பில் சென்னை வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார் பேசினார்
Published on

பழனி:

பழனி அருகே ஆயக்குடியில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு இலவசமாக பயிற்சி மையம் மரத்தடியில் செயல்பட்டு வருகிறது.

நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான சிறப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் முன்னிலை வகித்தனர். சென்னை வருமானவரி கூடுதல் ஆணையர் நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:

அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுகள் நடைபெறாததால் தற்போது போட்டி அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தன்னம் பிக்கையோடு படித்தால் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாகலாம் என்றார்.

இதில் ஏராளமான மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com