செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 'லிப்ட்' அறுந்து விழுந்ததால் பரபரப்பு

இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே ‘லிப்ட்’ நின்றுவிட்டது.அருகில் இருந்தவர்கள் ‘லிப்ட்’டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முதல் தளத்தில் லிப்ட் அறுந்து கிடப்பதை காணலாம்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முதல் தளத்தில் லிப்ட் அறுந்து கிடப்பதை காணலாம்.
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3-வது தளத்தில் உள்ள 'லிப்ட்'டை நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4½ மணியளவில் 3-வது மாடியில் இருந்து ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 12 பேர் 'லிப்ட்'டில் ஏறினர். அப்போது திடீரென 'லிப்ட்'டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி அறுந்து மளமளவென முதல் தளத்தில் இறங்கி நின்றது. மேலும் இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே 'லிப்ட்' நின்றுவிட்டது. இதனால் 'லிப்ட்'டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் 'லிப்ட்'டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com