கோவையில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு

4 பவுன் செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
கோவையில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு
Published on

கோவை,

துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு சவுடாம்பிகை நகரை சேர்ந்தவர் அனந்த வேல். இவரது மனைவி குஷ்பு (வயது30).

சம்பவத்தன்று இவர் தனது சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு சென்றார். சைக்கிள் வீட்டின் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று சைக்கிளில் வந்த குஷ்புவிடம் முகவரி கேட்டார். அவர் சொல்லிக்கொண்டு இருந்த போது அந்த வாலிபர் குஷ்பு கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட குஷ்புவின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்ற ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். பின்னர் பிடித்த வாலிபரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்ததிய விசாரணையில் அவர் சித்தாபுதூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகநாதன் (28) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய சரவணன்(28) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com