காப்பீடு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழ்

காப்பீடு திட்டத்தில் பணியாற்றிய சிறந்த தனியார் மருத்துவமனையாக தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது.கலெக்டர் ஆகாஷ் பாராட்டு சான்றிதழை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசனிடம் வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் ஆகாஷ்,  மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசனிடம் பாராட்டு சான்றிதழை வழங்கியபோது எடுத்த படம்.
மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசனிடம் பாராட்டு சான்றிதழை வழங்கியபோது எடுத்த படம்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நடந்த 74-வது குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பணியாற்றிய சிறந்த தனியார் மருத்துவமனையாக தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்க சாந்தி பன்நோக்கு மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசன் பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டேவிட் செல்லதுரை மற்றும் மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர் தமிழரசன் கூறுகையில், இந்த பாராட்டு மற்றும் சான்றிதழ் எங்கள் மருத்துவமனையில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம் என்று பெருமையுடன் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com