வாலிபரை சரமாரி தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்

ஆத்திரம் அடைந்த இளங்கோ அழகுவை தாக்கி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபரை சரமாரி தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்
Published on

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த கரைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அழகு (வயது 51). இவர் வீரபாண்டி அடுத்த நொச்சிப்பாளையம் பிரிவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு புறப்பட தயாராக இருந்தார். அப்போது அருள்புரம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜென்ட் இளங்கோ (23) மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி அதிவேகமாக ஆட்டோ மீது மோதுவது போல வந்து நின்றதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து அழகு பார்த்து போக வேண்டியதுதானே என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோ அழகுவை தாக்கி உள்ளார். இதில் அழகு வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் இளங்கோவிடம் பேசி உள்ளனர். அப்போது இளங்கோ அவர்களையும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் இளங்கோவை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ டிரைவர்கள் இளங்கோவை தாக்கிய சிசிடிவி., காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com