ரூ.12 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு

ரூ.12 லட்சம் பண மோசடி புகாரில் மரக்காணம் அதிமுக பிரமுகரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்கு
வழக்கு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சிறுவாடியைச் சேர்ந்தவர் தயாளன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்குக் கடற்கரைச் சாலை கீழ்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். எனக்கு நண்பர் என்ற வகையில் அறிமுகமானார். பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். தொழிலை விரிவாக்கம். செய்வதற்கும், என்னை பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி பண உதவிகளை கேட்டார். பல தவணைகளாக மொத்தம்ரூ. 

12 லட்சம் பணத்தை வங்கி மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்தேன். எனது 2 பெண் பிள்ளைகளுக்காக சிறுக சிறுக சேமித்த பணத்தை முழுவதுமாக அவரிடம் கொடுத்து வைத்திருந்தேன். ஆனால் இந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் அவருக்குச் சொந்தமான வீட்டுமனையை கிரையம் செய்து கொடுப்பதாக கூறினார். ஆனால் அந்தப் பத்திரம் போலியானது என்று தெரியவந்தது. 

அதேபோல் அவருக்குச் சொந்தமான காரை விற்று பணம் தருவதாக கூறினார். அவர் கொடுத்த காரும் லோனில் இருப்பது தெரியவந்தது. இந்த பண மோசடியில் அவரது நண்பரும் உடந்தையாக இருந்தார். என்னை போல் மேலும் பலரிடம் சுமார் சுமார் ரூ.1 கோடி அளவில் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறினார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் பண மோசடி செய்து இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து உதயகுமார் அவரது நண்பர் ஆகிய 2 பேர் மீதும் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட உதயகுமார் மரக்காணம் ஒன்றிய அதிமுக பிரமுகர்என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com