போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்கு

ராமகிருஷ்ண ராஜா அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார். ராமகிருஷ்ண ராஜா மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்கு
Published on

புதியம்புத்தூர்:

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (வயது39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது

இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதியம்புத்தூர் காவல் சரகம் புதூர் பாண்டி யாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புதியம்புத்தூர் போலீசார் ராமகிருஷ்ண ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com