போடி அருகே சிறுமிக்கு திருமணம் செய்த 5 பேர் மீது வழக்கு

டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது. சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி அம்மாபட்டியை சேர்ந்தவர் வீரச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியரின் 17 வயது மகளை போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த செல்வன் மகன் சந்திரபிரகாசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர்.

அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறைக்கு புகார் தெரிவித்தனர். பின்னர் போடி அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் செல்வன், மகேஸ்வரி, கணவர் சந்திரசேகர், சிறுமியின் பெற்றோர் வீரச்சாமி, லட்சுமி ஆகிய 5 பேர் மீதும் சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com