காண்டிராக்டரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

கம்பத்தில் காண்டிராக்டரை மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் மணிக்கட்டி ஆலமரம் சாலையில் ஆதிதிராவிட நலத்துறை குடிசை மாற்று வாரியம் சார்பாக பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதனை ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்து குடிசை மாற்று பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் வெங்கடேசன் (வயது 53) என்பவர் பிராஜக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

இங்கு கம்பத்தைச் சேர்ந்த ஜெயமணி, லட்சபிரபு ஆகியோர் அதனை தங்கள் இடம் எனக் கூறி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு பெற்றிருந்தனர். இந்த நிலையில் அதனை எதிர்த்து ஆதி திராவிடர் நலத்துறை வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை உத்தரவை நீக்க ஆணை பிறப்பித்தது. இதனால் மீண்டும் பணிகள் தொடங்கியது. அப்போது அங்கு வந்த ஜெயமணி, லட்சபிரபு ஆகியோர் அவர்களை பணி செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com