கடையம் அருகே காயங்களுடன் பிணம்-டிரைவர் மர்மச்சாவு

கடையம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.சிதம்பரம் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
கடையம் அருகே காயங்களுடன் பிணம்-டிரைவர் மர்மச்சாவு
Published on

கடையம்:

கடையம் அருகே ஆசீர்வாதபுரம் தாமிரபரணி குடிநீரேற்றும் நிலையம் அருகே இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் காக்கிநிற ஆடையில் இருந்ததால் டிரைவராக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் நெல்லை மாநகர் தச்சநல்லூரை சேர்ந்த சிதம்பரம் (வயது 34) என்பதும், தென்காசியில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அந்த வழியாக சென்ற வாகனம் மோதி அவர் இறந்தாரா? அல்லது அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com