

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன்.
இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் இன்று கோயம்புத்தூருக்கு காரில் புறப்பட்டார்.
காரை டிரைவர் நடராஜன் என்பவர் ஒட்டினார்.
கார் தஞ்சாவூர் அருகே உள்ள 8 கரம்பை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே லாரி வந்து கொண்டிருந்தது.
இதனால் டிரைவர் காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளார்.
ஆனால் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கொட்டி வைத்திருந்த நெல் குவியல் மீது மோதி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.
இந்த விபத்தில் 3 பேர் காரை விட்டு வெளியே வந்தனர்.
நடராஜன், டிரைவர் நடராஜன், ஜெயலட்சுமி, சுலோட்சனா ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது அவ்வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தை பார்த்துவிட்டு காரில் சிக்கிக் கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
இதனையடுத்து காயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தை கண்டு உடனடியாக ஆம்புலன்ஸை நிறுத்தி மீட்ட ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.