இண்டூர் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலி

நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நல்லம்பள்ளி:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி  அருகே பூட்டுக்காரன்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது40). இவரது மகன் விஸ்வநாதன்(10).

இந்த நிலையில் நேற்று மாலை இண்டூரில் இருந்து  மோட்டார் சைக்கிளில் தனது மகனை அழைத்து கொண்டு தருமபுரி நோக்கி வந்துள்ளார். அப்போது தருமபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி கார் ஒன்று வந்தது.

இந்த நிலையில் ஏரிக்கோடி என்ற இடத்தில் வந்தபோது  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செந்தில்குமார் மற்றும் அவரது மகன் விஸ்வநாதன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். 

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

இதில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி இரவு 8 மணிஅளவில் பரிதாபமாக இறந்தார். விஸ்வநாதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறிதது இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com