வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதம்

சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்.தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எரிந்து நாசமான வைக்கோல் கட்டுகள்.
எரிந்து நாசமான வைக்கோல் கட்டுகள்.
Published on

சீர்காழி:

சீர்காழி கடலோர கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக நெப்பத்தூர் கிராமத்தில் லலிதா என்பவரது பழைய ஓட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமானது மேலும் ஓட்டு கட்டிடத்தில் உள்ள கோடுகள் சேதம் ஆகி உள்ளது.

தகவல் அறிந்த சீர்காழி மற்றும் மேலையூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அனைத்தனர்.

இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com