இரணியல் சார் பதிவாளர் அலுவலக ஜன்னலில் மறைத்து வைக்கப்பட்ட லஞ்ச பணம்

இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் புரோக்கர்கள் பலரும் சிக்கினார்கள்ஜன்னல் கண்ணாடியின் பின்னால் ரூ.500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இரணியல் சார் பதிவாளர் அலுவலக ஜன்னலில் மறைத்து வைக்கப்பட்ட லஞ்ச பணம்
Published on

கன்னியாகுமரி :

இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் புரோக்கர்கள் பலரும் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதை பார்த்த புரோக்கர்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கையில் இருந்த பணத்தை பதுக்கி வைத்தனர். அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியின் பின்னால் ரூ.500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் அந்த இடத்திற்கு சென்று அந்த பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com