கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே புலவர் நத்தம் கிருஷ்ணாபுரத்தில் சர்வ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

நேற்று தரிசனம் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர்.

கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

உண்டியல் கடந்த ஓராண்டாக எண்ணப்ப டாமல் இருந்ததால் அதில் பல ஆயிரம் பணம் இருக்கும் என தெரிகிறது.

இது பற்றிய புகாரின் பேரில், உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது:-

எங்கள் கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

மின் மோட்டாரின் காப்பர் வயர்கள் அடிக்கடி திருடு போகிறது.தற்போது கோவில் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளைய டிக்கபட்டு உள்ளது.

தொடர் திருட்டு சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com