பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி டாக்டர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி பிரபாவதி (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டைப் பூட்டிவிட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க செயின், 7 கிராம் தோடு மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றது தெரியவந்தது.

இதுபற்றி அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சாம்சன்லியோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com