கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியை கடத்திய காதலன்

இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். போலீசார் மாணவியின் காதலன் உட்பட அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியை கடத்திய காதலன்
Published on

கோவை,

கோவை அய்யண்ண கவுண்டர் விதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

நேற்று மாணவிக்கு பிறந்தநாள். இதனையடுத்து மாணவி அவரது காதலனுடன் வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள பூங்காவிற்கு சென்றார்.

அங்கே மாணவியின் காதலன் அவரது நண்பர்களுடன் மாணவிக்காக காத்திருந்தார். மாணவி வந்ததும் அவர்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி மாணவியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

அப்போது அவர்கள் சந்தோஷத்தில் சத்தம் போட்டனர். இதனை அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பார்த்து, இவர்களின் அருகே வந்து இங்கே சத்தம் போடக்கூடாது என எச்சரித்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீட்டுக்கு சென்றதும் வாலிபரை காதலிக்கும் விஷயம் மாணவியின் தந்தைக்கு தெரிய வந்தது.

இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவி தனது காதலனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் உடனே வீட்டிற்கு வந்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.

வாலிபர் தனது நண்பர்கள் 3 பேருடன் மாணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவரை வெளியே அழை த்துச் செல்ல முயன்றார்.

அப்போது அவரது தந்தை தடுத்து நிறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியின் தந்தையை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து மாணவியை அழைத்து சென்றார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியின் காதலன் உட்பட அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com