கோவையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

பிரனேசுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
கோவையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
Published on

கோவை,

கோவை சுந்தராபுரம் குறிச்சி ஆண்டாள் தோட்டத்தை சேர்ந்தவர் மனோவா. ஆட்டோ டிரைவர். இவரது மகன் பிரனேஷ் (வயது 12). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனேஷ் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com