களக்காடு அருகே மண் கடத்திய சிறுவன் கைது- டிராக்டர் பறிமுதல்

குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த சிறுவனையும் கைது செய்தனர்.
களக்காடு அருகே மண் கடத்திய சிறுவன் கைது- டிராக்டர் பறிமுதல்
Published on

களக்காடு:

களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில் அரசு அனுமதி இன்றி குளத்து மண்ணை திருடி விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் செண்டு என்பவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com