17 வயது சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
17 வயது சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் சிறுமிக்கு நெகமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான 17 வயது சிறுவனுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சிறுவன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சிறுவன் அவரை திருமணம் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் திருமணம் செய்து கொண்ட சிறுவன், சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சிறுமியை போலீசார் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com