ஏர்வாடி அருகே புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு பூமி பூஜை -ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

அடிக்கல் நாட்டு விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.
புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.
Published on

நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் தன் சொந்த செலவில் செய்து வருகின்றார். அதனடிப்படையில் இன்று களக்காடு ஒன்றியம் ஏர்வாடி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள திருவரங்கநேரி வடக்கு புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிட பணிகளை தொடங்கி வைத்து அவர் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com