ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு மோப்பநாய் கொண்டு சோதனை நடைபெற்றது
திண்டுக்கல்  ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் கொண்டு சோதனை நடைபெற்றது
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் கொண்டு சோதனை நடைபெற்றது
Published on

திண்டுக்கல்:

நாட்டின் 75வது குடியரசு தின விழா வருகிற புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

ரெயில் நிலையம், பஸ் நிலையம், வழிப்பாட்டு தலங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மோப்ப நாய்களை கொண்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலைய வளாகம் முழுவதிலும் இந்த சோதனை நடைபெற்றது. பயணிகள் அமரும் இடம், டிக்கெட் கவுண்டர், பார்சல் இடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் திண்டுக்கல் வழியாக சென்ற ரெயில்களிலும் மோப்பநாய் சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் ஏற்கனவே வழிபாட்டுத்தலங்கள் வார விடுமுறை நாட்களில் அடைக்கப்பட்டுள்ளதால் குடியரசு தின விழா நிறைவு பெறும் வரை இந்த சோதனை நடத்தப்படும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com