கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரகா -அக்னிச்சிறகுகள் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்

22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு குடைகள் வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு குடைகள் வழங்கப்பட்ட காட்சி.
முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு குடைகள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச்சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ரத்ததான முகாம்

முகாமிற்கு தொழில் அதிபரும், ஸ்ரீராகவேந்திர சேவா அறக்கட்டளை நிறுவனருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். தொழில் அதிபரும், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு நல உரிமை துணை அமைப்பாளருமான அமலி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

இதில் 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு குடைகள் வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தேவசேனா, ரோஸ்லின், செவிலியர்கள் லட்சுமி காந்தம், சுபா, சேவியர், அக்னி சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை முத்துமாரியம்மன், பகவத்சிங் ரத்ததானகழக நிறுவனர் காளிதாஸ், ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மகேஷ், பெருமாள், கருப்பசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

ரத்ததான முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாட்டினை ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com